Sunday, December 5, 2010

நகரக் காதல்

 .
கண்கள் காணும் காட்சியை சொல்ல முடியா தேர்ச்சியை
வெட்கமடைந்து கூறுகிறேன் என் வேதனையின் உயர்ச்சியை
இதுதான் நாகரீகக்காதல் கொழும்பு நகரின் நரகக்காதல்


BUS வண்டி அவர்களுக்கு படுக்கை அறையாம்
GALLE FACE அவர்களுக்கு கோலிவூட் திடலாம்
பூங்காக்கள் அவர்களுக்கு பூட்டிய அறையாம்
ZOO அவர்களுக்கு சொந்த வீடாம்


கொட்டும் மழையெல்லாம் காதலர்களுக்கு கற்கண்டு மாதிரி
கொழுத்தும் வெயிலெல்லாம் அவர்களுக்கு கொண்டாட்டம் பாரடி
வீட்டுப்பொறுப்பெல்லாம் காதலர்களுக்கு விடைதெரியா புதிரடி
தாய் தந்தை சொந்தமெல்லாம் அவர்களுக்கு தூரத்து உறவடி


காதலுக்கு கண்ணில்லை என்பது பொய்
காதலர்களுக்கு கண்ணில்லை என்பதுதான் மெய்
கடைத்தெருவெல்லாம் காதல் எனும் பேய்-அங்கே
காமலீலைகள் காசில்லா நெய்


காதலுக்கு நாம் எதிரியல்ல,காதலர்களுக்கு நாம் பகைவருமல்ல
தூய காதலுக்கு நாம் நெருங்கிய நண்பன்,உண்மைக்காதலுக்கு நாம் உற்ற தோழன்
காமங்களை களைந்து காதல் கொள்ளுங்கள்
கடவுளும் வாழ்த்துவார் அத்தூய அன்பினை.

No comments:

Post a Comment