Monday, November 29, 2010

காதல் கணக்கு

 .
(மன்னிக்கவும் இது கணக்கீடு தெரிந்தவர்களுக்கு மட்டும்)


அன்பே கணக்கீட்டை கண்ட பின் தான் உன் கண்களைக் கண்டேன்
கணக்கிலும் இனியது உன் கண்கள் என்பதால் காதல் பிறந்தது எனக்கு
உனக்கும் கணக்கிற்கும் தொடர்பில்லை எனினும்
காதலுக்கும் கணக்கிற்கும் நிறைய தொடர்புண்டு...


உன் ஐவிழிப் பார்வையில் கண்டேன் ஐந்தொகையை
அதில் சொத்துக்கள் எல்லாம் உன் சொரூபப் புருவங்கள்
பொறுப்புக்கள் எல்லாம் உன் பொன்னான இதழ்கள்
செலவென்று உனக்கு எதுவும் இல்லை எல்லாம் வரவே


நீ கதைத்தால் கடன்பட்டோர் கணக்கு, அழுதால் அறவிடமுடியாக்கடன்
நீ சிரித்தால் சில்லறைக் காசேடு, பேசினால் பேரேடு
காதல் கணக்கு போட்டால் மீதி கீழ்க் கொண்டு வருவதெல்லாம் உன் புன்னகையே
பரீட்சை மீதி சமப்பட்டால் நம் காதல் கட்சிதம்,
தொங்கல் கணக்கு வந்தால் தோற்கும் நம் காதல்…...


இறுதி இருப்பெல்லாம் எம் வாழ்க்கைக்கு சீதனம்
கையில் உள்ள காசு அதற்கு மென்மேலும் ஊர்ஜிதம்
நீண்ட கால பொறுப்புக்கள் எம் வாழ்க்கைக்கு நிரந்தரம்
குறுங்கால பொறுப்புக்கள் எம் கூடவே இருக்கும்


கணக்கீடு மாறினாலும் நம் காதல் மாறாது,
கணக்கீட்டு நியமங்கள் மாறினாலும் நம்
காதல் நியமங்கள் மாறாது.....
.

1 comment:

  1. கணக்கில பின்னுறீங்க கௌதமன்

    ReplyDelete