Wednesday, November 24, 2010

நண்பர்களா அல்லது உறவினரா நமக்கு வேண்டியவர்கள்??

 .
உயிர்கொடுக்கும் நட்பிற்க்கு ஒப்பில்லை வேறு
உயிர் எடுக்கும் உறவிற்கு உணர்வில்லை வேறு
உற்ற நண்பர்கள் உடனிருக்கும் போது
உயிரற்ற உறவுகள் உடனெமெக்கு ஏது


எம் கையில் காசிருந்தால் மட்டும் எம்மைக் கவனிக்கும் உறவு
காசில்லை என்றால் கடன் பயம் அதற்கு வேறு
காசில்லா விடின் உடன் கடன் கொடுக்கும் நட்பு
கடன் பயமெல்லாம் அதற்கு வெறும் தூசு


பொய் வேசம் போட்டு புகழ் பாடும் உறவு-ஆனால்
மெய் உள்ளம் கொண்டு பாராட்டும் நட்பு
உதவி வரும் போது மட்டும் உடன் அழைக்கும் உறவு
உற்ற நட்பிற்கு உதவிகள் தினம் தினம் வேறு


நாம் உயர் நிலையில் இருந்தால் உடனிருக்கும் உறவு-ஆனால்
நட்பிற்கு இந் நிலைகளெல்லாம் வெறும் கோது
தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்கும் இவ் உறவெல்லாம் ஏது
தொடர்பின்றியும் உயிர் கொடுக்கும் உற்ற நட்புள்ள போது


என் வேலைப் பளுவால் தொடர்பறுக்கப்பட்ட என் தோழர்களே துவங்காதீர்
தொடர்பில்லை என்றாலும் தொடரும் நம் தூய நட்பு...
.

No comments:

Post a Comment